“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு”
“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு” என்ற தலைப்பில் எழுத்தாளரும், தமிழறிஞரும், இசை வல்லுனருமான பத்மபூஷன் திரு. பெ. தூரன் அவர்கள் அருட்செல்வரின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எழுதிய கட்டுரை. . . “நூறு இளைஞர்கள் வேண்டும். ஆர்வமும், எஃகு போன்ற மனவலிமையும் உள்ள நூறு இளைஞர்கள் இருந்தால் இந்த நாட்டை மிக விரைவிலே மாற்றி அமைத்து விடுவேன்” என்று வேதாந்தகேசரியாகிய சுவாமி விவேகானந்தர் முழங்கினார். அந்த வீர வாசகத்தைப் படித்ததும் இதோ ஓர் இளைஞர் இருக்கிறார் என்ற…