மனம் கவர்ந்த மகாலிங்கம்

பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் ஒரு கார் பழுதடைந்து நின்றது, காரின் சொந்தக்காரர் எனக்குத் தெரிந்தவர். அவர் வழக்கமான புன்முறுவலுடன் வரவேற்றுப் பேசினார். இரண்டு இளைஞர்கள் காரைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை, இவன்தான் என் மகன். என்ஜினீரிங் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான்.” என்று மிகப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். தமது ஒரே மகன் இன்று பேரும் புகழும் பெற்று விளங்குவதைக் கண்டால், அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்கள் அளவற்ற பெருமையடைந்திருப்பார்.…