என்.ஜி.எம். கல்லூரி மாணவ மாணவியருக்கு,
நமது கல்லூரி இணையத்தளத்தில் அருட்செல்வர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என்.ஜி.எம். கல்லூரி நூலகம் மற்றும் அருட்செல்வர் மாணவர் சிந்தனை மன்றம் இணைந்து கட்டுரை போட்டி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை அனுப்பலாம்.
கட்டுரைகளைக் கீழ்க்காணும் படிவம்மூலம் பூர்த்திசெய்து அனுப்பலாம்
அல்லது , கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்
தமிழ் கட்டுரை போட்டி
கட்டுரை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 03.03.2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கட்டுரை தளத்தில் அறிவிக்கப்படும்.
முதல் பரிசு ரூபாய் 500
கட்டுரை போட்டி தொடங்கும் நாள் – 06.02.2023
கட்டுரை போட்டி முடியும் நாள் – 16.02.2023
கட்டுரை போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நாள் – 03.03.2023
பரிசு வழங்கப்படும் நாள்: 04.03.2023
பரிசு ரூபாய்
முதல் பரிசு – ரூபாய் 500
இரண்டாம் பரிசு – ரூபாய் 300
முன்றாம் பரிசு – ரூபாய் 200
கட்டுரை போட்டிக்கான விதிமுறைகள்:
நீங்கள் எழுதிய கட்டுரை வேறு எந்த இணைய தளத்திலும் பதிவிட்டிருக்காத உங்கள் சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும்.
கட்டுரை தலைப்பு
“அருட்செல்வர் ஒரு சகாப்தம்”
கட்டுரை 350 சொற்களுக்கு மேல் அமைய வேண்டும்.
கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட 5 மணி நேரத்தில் உங்கள் விபரங்களுடன் நமது கல்லூரி அருட்செல்வர் மாணவர் சிந்தனை மன்றம் இணைய தளத்தில் இடம்பெறும்.
உங்களது கட்டுரை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கட்டுரைக்குரிய வாக்குகளையும் ஆதரவினையும் அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter…
கட்டுரைக்குக் கிடைக்கும் பாராட்டுகள் (Likes, Votes) மற்றும் விமர்சனங்களை (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இது தொடர்பான உங்கள் சந்தேகங்களை இங்கே அனுப்பலாம்.