யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி மோட்சத்தை அடைவது வரை பல்வேறு வகைப்படும்.
யோகா பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- யோகாவின் குறிக்கோள்
- யோகாவின் பயன்கள்
- யோகா தினம்
- முடிவுரை
முன்னுரை
யோகா என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த அரிய கொடை எனலாம். யோகா என்ற சொல்லிற்கு பல பொருள்கள் வழங்கப்பட்டாலும் மேம்படுத்தல் என்ற பொருள் சற்றே பொருத்தமாக அமையும்.
மேலும் உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறியாகும்.
உடல், மனம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்யும் யோகா பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
யோகா இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடை. யோகா என்ற சொல்லிற்குப் பல பொருள்கள் வழங்கப்பட்டாலும், மேம்படுத்துதல் என்ற பொருள் சற்றே பொருத்தமாக அமையும். யோகா என்பது உடற் பயிற்சி மட்டும் அல்ல. இது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. யோகா வாழ்க்கை முறை நமது உடல், மனம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்கிறது.
யோகா பண்டைய இந்தியாவின் ஆறு தத்துவ சித்தாந்தங்களில் ஒன்றாகும். பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். யோகா வாழ்க்கை முறையில் பதஞ்சலி முனிவர் படிப்படியாக எட்டு நிலைகளை பற்றிக் கூறுகிறார். இவை யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி ஆகியன. ஒவ்வொரு சாதகரும் யோகா வாழ்க்கை முறையில் இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாகக் கடந்து சமாதி என்ற உயரிய நிலையை அடைய வேண்டும்.
யோகாசனம் என்பது யோகா வாழ்க்கை முறையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு உடல் தோரணைகளைக் குறிக்கும். நோயற்ற வாழ்விற்கும், உடல் பலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் யோகாசனங்கள் வழிவகை செய்கின்றன.
யோகா நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பயிற்சியாகும். ஒரு சில யோகாசனங்களையாவது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு நமது அன்றாட வாழ்வின் பயிற்சியாக அவற்றை செய்வது நமக்கு நீடித்த நலம் பயக்கும்.
வரலாறு
இக்கலை பதஞ்சலி முனிவரால் இந்தியாவில் தோன்றி வளர்ந்தது ஆகும். யோகாவின் தோற்ற காலம் 5000 வருடங்களுக்கு முன்னரானது என்ற கருத்து இருந்தாலும் விவாதத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.
இது வேத காலத்திற்கு முற்பட்டதாகத் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. சிந்து சமவெளி நாகரீகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் யோக அல்லது பொதுவான தியான நிலைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
யோகாவின் குறிக்கோள்
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி மோட்சத்தை அடைவது வரை பல்வேறு வகைப்படும். ஒவ்வொரு சமயங்களும் ஒவ்வொரு விதமான குறிக்கோளுடன் யோகாவை பரிந்துரை செய்கின்றன.
சமணத்திலும் சைவத்திலும் யோகாவின் குறிக்கோள் உலகியல் துன்பங்களிலிருந்து பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் ஆகும்.
பிரம்மத்தில் ஐக்கியம் இதன் குறிக்கோள் ஆகும். மஹாபாரதத்தில் இதன் குறிக்கோள் ஆத்மாவை உணர்தல் அல்லது பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைதல் ஆகும்.
யோகாவின் பயன்கள்
முறையாக யோகா செய்வதனால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுலடைய செய்கிறது. உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
மரணத்தைத் தள்ளிப் போடுகின்றது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகின்றது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாட்டையும் வளர்க்க உதவுகின்றது.
யோகா தினம்
சமீப காலமாக யோகாவின் முக்கியத்துவத்தை பல நாடுகளும் புரிந்து கொண்டு இந்த வாழ்க்கை முறையினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தியாவின் உதவியை நாடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் நாளை அகில உலக யோகா தினமாக நாம் கொண்டாடுகிறோம். அன்றைய தினத்தில் பல்வேறு நாடுகளிலும் யோகா சம்மந்தமான பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பெறுகின்றன.
யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ம் திகதி அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகின்றது.
முதல் முறையாக 2015 ஆம் ஆண்டு ஜுன் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் ஆண்டின் ஒரு நாளைச் சர்வதேச யோகா நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுருத்தியதற்கு அமைவாகவே யோகா தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
முடிவுரை
சமீப காலமாக யோகாவின் முக்கியத்துவத்தை பல நாடுகளும் புரிந்து கொண்டு இந்த வாழ்க்கை முறையினை பற்றித் தெரிந்து கொள்ள இந்தியாவின் உதவியினை நாடுகின்றன.
யோகா நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பயிற்சியாகும். குறைந்தது சில யோகாசனங்களையாவது நாம் அன்றாடம் செய்வது நமக்கு நீடித்த நலத்தினை அளிக்கும்.
The goal of yoga varies from improving health to attaining moksha.
- Essay on Yoga
- frame of reference
- Foreword
- History
- The goal of yoga
- Benefits of Yoga
- Yoga Day
- Conclusion
Yoga is a unique gift of Indian culture and tradition to the world. Although many meanings are given to the word yoga, the meaning of improvisation is quite apt.
It is also an art that aids in the development and balance of body, mind, intellect, consciousness and spirituality. It is a code of ethics that promotes the well-being of body and soul.
In this article we can see about yoga that leads to physical, mental and spiritual progress.
History
This art was developed in India by Sage Patanjali. Although the origin of yoga dates back 5000 years, it remains a matter of debate.
It is also believed to have appeared before the Vedic period. Some of the seals on the sites of the Indus Valley Civilization depict yogic or general meditative positions.
The goal of yoga
The goal of yoga varies from improving health to attaining moksha. Different religions recommend yoga with different goals.
The goal of yoga in Jainism and Saivism is liberation from worldly suffering and the cycle of birth and death.
Unity in Brahman is its goal. In the Mahabharata its goal is the realization of the soul or entry into the world of Brahma as Brahman.
Benefits of Yoga
- Practicing yoga properly can keep your body healthy. Strengthens weak parts of the body. Helps maintain body weight.
- Postpones death. Helps in controlling blood pressure and helps in dissolving cholesterol in the blood.
- Controls stress. It also helps to develop self-confidence, self-control and mental integrity.
Yoga Day
International Yoga Day is observed globally on 21st June every year to highlight the importance of yoga to people.
International Yoga Day was celebrated for the first time on June 21, 2015.
In 2014, Prime Minister Narendra Modi’s speech at the United Nations called for one day of the year to be declared as International Yoga Day to spread the glory of yoga around the world.
Conclusion
Recently, many countries have understood the importance of yoga and sought India’s help to know about this way of life. Yoga is a daily practice. Practicing at least a few yoga poses daily can give us lasting health benefits.